பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
இருப்பினும், சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து, அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தும் மோசடியான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.