வரி அதிகரிப்பால் மதுபானத்தின் விலை உயர்வு... விலை தொடர்பில் வெளியான தகவல்

 மதுபானத்தின் விலை உயர்வு: பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் 29, 2023 - 18:15
டிசம்பர் 29, 2023 - 18:22
வரி அதிகரிப்பால் மதுபானத்தின் விலை உயர்வு... விலை தொடர்பில் வெளியான தகவல்

 மதுபானத்தின் விலை உயர்வு

பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரித் திருத்தத்திற்கு அமைய பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 18 வீத பெறுமதி சேர் வரி விதிக்கப்படவுள்ளது. 

எரிபொருள் - சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுமா? வெளியான தகவல்!

இந்த நிலையில் Distilleries Company of Sri Lanka PLC தனது மதுபானங்களின் விலைகளை திருத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.

375 மில்லிலீட்டர் மற்றும் 180 மில்லி லீட்டர் மதுபானத்தின் விலை முறையே ரூ.50 மற்றும் ரூ.20 அதிகரிக்கப்படும்.

ஜனவரி 1 முதல் விலை உயர்வு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!