எரிபொருள் - சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுமா? வெளியான தகவல்!
எரிபொருளுக்கான 18 சதவீத VAT அமுல்படுத்தும் போது, அந்த வரியில் இருந்து 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.

ஜனவரி 1ஆம் திகதி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT அமுலாக்கத்தில் இருந்து துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, நிதியமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா இன்று தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கான 18 சதவீத VATஅமுல்படுத்தும் போது, அந்த வரியில் இருந்து 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.
வரி அதிகரிப்பால் மதுபானத்தின் விலை உயர்வு... விலை தொடர்பில் வெளியான தகவல்
சமையல் எரிவாயுக்கான 18 சதவீத VAT அமுல்படுத்தும்போது, தற்போதுள்ள 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மீதான VAT காரணமாக விலை அதிகரிக்காது என்றும் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.