சூரியனால் உச்சம் தொட போகும் ராசிகள்
நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்குகிறார். கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை இடப்பெயர்ச்சி அடைவார்.

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்குகிறார். கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை இடப்பெயர்ச்சி அடைவார். சூரிய பகவான் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காலை கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
ஒரு மாத காலம் இதே ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் சுப மற்றும் அசுப பலன்கள் 12 ராசிகளுக்கும் கிடைக்கும். அந்த வகையில் சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக விளங்குகிறார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. எதிரிகளால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் விலகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கடக ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டின் அதிபதியாக விளங்குகிறார். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியின் பத்தாம் வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் விலங்கு வருகிறார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.