ஒன்றின் விலை 15 ரூபாய்... உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
உள்நாட்டு சந்தையில் பச்சை மிளகாய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

உள்நாட்டு சந்தையில் பச்சை மிளகாய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
தம்புள்ளை நகரில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் தனித் தனியாக பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் நேற்றைய(29) நிலவரப்படி, பச்சை மிளகாய் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை காணப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தைகளில் பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,800 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக அனைத்து விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.