நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்?
எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை அரசாங்கம் குறைக்கலாம்.

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய உலக கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இலங்கையில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை அரசாங்கம் குறைக்கலாம்.
கடந்த பெப்ரவரி (29) நள்ளிரவில் எண்ணெய் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாமல், மார்ச் முதல் வாரத்தில் விலை திருத்தம் இடம்பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.