10 ருபாயால் குறைக்கப்படும் முட்டை விலை; வெளியான அறிவிப்பு
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சந்தையில் முட்டை விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சந்தையில் முட்டை விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டைகளின் விலையை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு வெள்ளை முட்டையை 18 ரூபாய்கும் சிவப்பு முட்டையை 20 ரூபாய்க்குத் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
எனினும், சந்தை தொடர்பில் சரியான புரிதல் இல்லாமல் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் விலைகளைக் குறைப்பது ஆபத்தான நடவடிக்கை என்று அகில இலங்கை கோழி வணிகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரித்தார்.
இதற்கிடையில், நேற்று (10) உலக முட்டை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ருஹுணா பல்கலைக்கழகத்தின் விலங்கு அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் இந்துநில் பத்திரண, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக முட்டைகளை ஏற்றுமதி செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.