முட்டை விலை மீண்டும் உயர்ந்தது.. என்ன நடக்கின்றது?
சந்தையில் மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் விலை 55 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
எனினும், போதிலும், மீண்டும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.