அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; சிறையில் அரசியல் பயணம் தொடரும் என நாமல் சூளுரை
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராஜபக்ச குடும்பத்தின் பணத்தை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருமாறும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என நாமல் ராஜபக்ச எம்.பி உறுதியாக தெரிவித்துள்ளார். எம்மை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச எம்.பி, இன்று சனிக்கிழமை (17) அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றும் போது, இந்த சூளுரையை வெளியிட்டார்.
1988 மற்றும் 1989 காலகட்டங்களில் நடந்த அரசியல் மோதல்களை மீண்டும் எங்களிடம் முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்திற்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராஜபக்ச குடும்பத்தின் பணத்தை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருமாறும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரே அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தம்புத்தேகம. 2026ஆம் ஆண்டுக்குரிய தனது முதலாவது அரசியல் கூட்டத்தை அங்கிருந்தே நாமல் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.

