அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய்வானுக்கு விஜயம்
தாய்வான் அதிபர் சாய் இங் வென்னைச் (Tsai Ing-wen) சந்தித்து சீனா தொடர்பாக அவர்கள் கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருநாள் பயணமாகத் தாய்வானுக்கு சென்றுள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கு சென்றவர்களில் உள்ளனர்.
தாய்வான் அதிபர் சாய் இங் வென்னைச் (Tsai Ing-wen) சந்தித்து சீனா தொடர்பாக அவர்கள் கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக, ஆஸ்திரேலியா சென்றிருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாலமன் தீவுகளில் (Solomon Islands) சீனா ராணுவத் தளம் அமைப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறித்து தாய்வான் வெளியுறவு அமைச்சு கருத்துச் சொல்ல மறுத்து விட்டது. ஆனால், தங்களுக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவுக்கும், தாய்வானுக்கும் இடையே அலுவல் ரீதியான எத்தகைய பரிவர்த்தனையையும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ள சீனா, அமெரிக்க ஆபத்தான பாதையில் செல்வதாக எச்சரித்துள்ளது.