கடலில் இருந்து கரை ஒதுங்கிய போத்தலுக்குள் இருந்த திரவத்தை குடித்த இளைஞர் இருவர் மரணம்
உயிரிழந்த இருவரும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய இளைஞன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளார்.
கடலில் இருந்து கரை ஒதுங்கியதாகக் கூறப்படும் ஒரு போத்தலுக்குள் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத திரவத்தை உட்கொண்ட இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ள துயர சம்பவம், புத்தளம் - நுரைச்சோலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம், நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய இளைஞன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளார்.
மேலும், அதே திரவத்தை உட்கொண்ட இருவர், புத்தளம் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.