பாடசாலையில் முறிந்து விழுந்த மரம் - மூவரடங்கிய குழு நியமனம்
பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை, ரஜவக்க மகா வித்தியாலயத்தில் மரம் முறிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பாடசாலை வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற மரங்கள் குறித்து பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
மரம் முறிந்து விழுந்து சேதமடைந்த பாடசாலைக்கு நேரடியாக சென்றதையடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்து சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் தர்ஷனி இதமல்கொட கூறுகின்றார்.
இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.