தபால் மூல வாக்களிப்பு தினம் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Jan 26, 2023 - 10:52
தபால் மூல வாக்களிப்பு தினம் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான பணிகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்