விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டுப் பெண்
டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்க வந்த ஒரு பெண் பயணி விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்க வந்த ஒரு பெண் பயணி விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அவர் 29 வயதான தான்சானிய நாட்டைச் சேர்ந்தவர்.
இன்று காலை 6.30 மணிக்கு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவர், மலேசியாவின் கோலாலம்பூருக்குப் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் காத்திருந்தார்.
பிரசவ வலியுடன் கூடிய ஆரம்பகால பிரசவ அறிகுறிகளை அனுபவித்ததால், உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியுடன் அவர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மேலதிக சிகிச்சைக்காக தாயையும் குழந்தையையும் நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.