பிரதமர் ஹரிணி – ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் சுவிட்சர்லாந்தில் சந்திப்பு
விமானப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வான்வழித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) தலைவர் மசாடோ கான்டாவை (Masato Kanda) சுவிட்சர்லாந்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அந்த மாநாட்டிற்குச் சமாந்தரமாக இச்சந்திப்பை மேற்கொண்டார். இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, பேரிடருக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக கலந்துரையாடினர்.
அதேவேளை, Menzies Aviation நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரி Hassan El Houry உடனும் பிரதமர் சந்திப்பை நடத்தினார். இதில் விமானப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வான்வழித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன.

