வீதிகளை புனரமைக்கும் பணிகளுக்கு இடையூறு வேண்டாம் : நிவாரண குழுக்களிடம் பொலிஸார் கோரிக்கை
மோட்டார் சைக்கிளில் செல்வோர் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களை அவதானிப்பதும், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்வதும் அங்கு கடமையாற்றும் குழுவினருக்குத் தடையாக உள்ளன. இப்படிச் செல்பவர்களுக்கும் இந்த நிலைமை ஆபத்தானது
மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் உடைப்பெடுத்த வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரும் எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் அப்பகுதிகளுக்கு வருகை தருவது வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்குத் தடையாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நிவாரணக் குழுக்களின் பணிக்குத் எமது மரியாதைக்குரிய நன்றியையும் தெரிவிக்கின்றேனம். எனினும், சில மாவட்டங்களின் வீதி புனரமைப்புப் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு அதிகளவான வாகனங்கள் வருவது அந்தப் பணிகளுக்குத் தடையாக உள்ளது.
“அத்துடன், மோட்டார் சைக்கிளில் செல்வோர் அனர்த்தம் ஏற்பட்ட இடங்களை அவதானிப்பதும், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்வதும் அங்கு கடமையாற்றும் குழுவினருக்குத் தடையாக உள்ளன. இப்படிச் செல்பவர்களுக்கும் இந்த நிலைமை ஆபத்தானது.
“எனவே, நிவாரணக் குழுக்கள், அந்தந்தப் பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளைத் தொடர்புகொண்டு, மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவும்” என அறிவுறுத்தினார்.