தேசிய கண் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
இன்று காலை 08 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக GMOAவின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வியாழக்கிழமை (22) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இன்று காலை 08 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக GMOAவின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வைத்தியர்களின் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாததை கண்டித்து, நாளை வெள்ளிக்கிழமை (23) முதல் இலங்கை முழுவதும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.