அந்த இரண்டு இந்திய வீரர்களை மட்டும் தூக்கிட்டா போதும்.. வெற்றி நமக்குதான் -  ஜோ ரூட் 

நாங்கள் இனி எந்த டீம் மீட்டிங்கும் நடத்தப் போவது கிடையாது. எங்களைச் சுற்றி இருக்கும் பேச்சுகளிலிருந்து நாங்கள் வெளியில் வருவதற்கு இது சிறந்த வழி. 

Feb 7, 2024 - 18:49
அந்த இரண்டு இந்திய வீரர்களை மட்டும் தூக்கிட்டா போதும்.. வெற்றி நமக்குதான் -  ஜோ ரூட் 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிந்திருக்கின்றன. 

இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருக்கின்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி ராஜ்கோட் சௌராஷ்டிரா அசோசியேஷன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

இந்திய அணி கிரிக்கெட் தேர்வுக் குழு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அணியை அறிவித்து இருக்கிறது. நாளை மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கும் அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் நான்கு இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பேட்டிங் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. அவர் மொத்தம் 52 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

யாரும் செய்யாத சாதனையை செய்த பும்ரா.. உலக கிரிக்கெட்டில் முதல் வீரர்!

ஜோ ரூட் நல்ல பேட்டிங் டெக்னிக் கொண்ட வீரர், அவருக்கு பாஸ்பால் முறையில் விளையாட வேண்டிய அவசியம் கிடையாது, அதிரடியாக விளையாட நினைக்கின்ற காரணத்தினால் தான் அவர் விக்கெட்டை இழக்கிறார், பாஸ்பால் அவரது பேட்டிங்கை கெடுத்து விட்டது என வெளியில் இருந்து பரவலான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இது குறித்து பேசி உள்ள ஜோ ரூட் கூறும்பொழுது “நாங்கள் இனி எந்த டீம் மீட்டிங்கும் நடத்தப் போவது கிடையாது. எங்களைச் சுற்றி இருக்கும் பேச்சுகளிலிருந்து நாங்கள் வெளியில் வருவதற்கு இது சிறந்த வழி. 

மேலும் நாங்கள் இரவு உணவுக்கான மேஜையிலோ அல்லது ஒரு தேநீர் சந்திப்பிலோ கலந்து பேசுவது சிறந்த ஒன்றாக அமையும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நவீன கிரிக்கெட்டில் எவ்வளவு சிறந்த வீரர்கள் என்று எங்களுக்கு தெரியும். 

தற்போதைய இந்திய பேட்டிங் வரிசையில் அவர்கள் இருவரும் மிகவும் சீனியர்கள். நிச்சயமாக அவர்களுக்கு இந்திய பேட்டிங் யூனிட்டில் பெரிய பங்கு இருக்கிறது. நீங்கள் அவர்களுக்கு எதிராக விளையாடும் பொழுது வெகு சீக்கிரத்தில் அவர்களை வீழ்த்தி முன்னேறிப் போக வேண்டும். 

ஏனென்றால் பெரிய ஸ்கோரை அடிக்கக்கூடிய திறன் படைத்தவர்கள். நாங்கள் சில முறை தவறு செய்திருக்கிறோம். ஆனால் இந்த முறை அவர்கள் இருவரையும் நாங்கள் சைலன்டாக வைப்பது நல்லது” எனக் கூறியிருக்கிறார்.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...