அதிகரிக்கப்பட்ட பஸ் பயணக் கட்டணம் இன்று முதல் அமுல்
இதற்கமைய குறைந்த பட்ச பஸ் பயணக் கட்டணம் 27 ரூபாயாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பஸ் பயணக் கட்டணம், இன்று முதல் அமுலாகிறது.
இதற்கமைய குறைந்த பட்ச பஸ் பயணக் கட்டணம் 27 ரூபாயாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த கட்டண அதிகரிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.
35 சதவீதத்தால் பஸ் பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை எரிபொருளின் விலை பாரிய தொகையால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஸ் கட்டணம் அதிகரித்துள்ள போதிலும் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.