புலம்பெயர்வோர் கட்டணத்தை அதிகரித்துள்ள பிரித்தானியா

புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிக்க உள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Feb 2, 2024 - 07:12
Feb 2, 2024 - 13:17
புலம்பெயர்வோர் கட்டணத்தை அதிகரித்துள்ள பிரித்தானியா

புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிக்க உள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்கீழ், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம் அதிகரிக்க உள்ளது.

அந்த சட்டத்தின்படி, பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோர், மருத்துவ கட்டணமாக ஆண்டொன்றிற்கு 1,035 பவுண்டுகள் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கட்டணம் தற்போது 624 பவுண்டுகளாக உள்ள நிலையில், இம்மாதம் 6ஆம் திகதியிலிருந்து இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

அதேபோல், 18 வயதுக்குக் குறைவான மாணவர்கள் தற்போது 470 பவுண்டுகள் கட்டணம் செலுத்தும் நிலையில், 6 ஆம் திகதி முதல் அது ஆண்டுக்கு 776 பவுண்டுகளாக உயர உள்ளது.

இது, தற்போதுள்ள கட்டணத்தைவிட 66 சதவிகித அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்படுகிறது. பிரித்தானியாவுக்கு புலம்பெயர விண்ணப்பம் செலுத்தும்போதே இந்தக் கட்டணத்தையும் புலம்பெயர்வோர் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...