சுற்றுலாவின் போது உங்கள் இருப்பிடத்தைக் காட்டும் செல்ஃபிகளை பதிவிட வேண்டாம் - பொலிஸார் எச்சரிக்கை
உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் வீடு அல்லது சொத்து பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கோ அது பயனுள்ள தகவலாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலா, யாத்திரை மற்றும் பல்வேறு பயணங்களின் போது, உங்கள் இருப்பிடத்தைக் குறிக்கும் செல்ஃபிகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் வீடு அல்லது சொத்து பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கோ அது பயனுள்ள தகவலாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அத்துடன், உங்கள் சுற்றுலாவிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பஸ் அல்லது வாகனம் மற்றும் சாரதியை பற்றிய சரியான புரிதல் மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.