பொலிஸாருக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு பணப்பரிசு!

தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் பொலிஸார் வழங்கியுள்ளனர். 

Jan 24, 2024 - 13:16
Jan 24, 2024 - 13:18
பொலிஸாருக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு பணப்பரிசு!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களை வழங்கும் நபர்களுக்கு 10,000 ரூபாய் முதல் 250,000 ரூபாய் வரை பணப் பரிசு வழங்க  பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான அறிவுறுத்தல்களை, அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கியுள்ளார்.

தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் பொலிஸார் வழங்கியுள்ளனர். 

அதன்படி, சட்டவிரோத T56, AK47, M16, SAR80, T81, 84S மற்றும் SLR போன்ற தானியங்கி துப்பாக்கிகள் பற்றிய முக்கிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 250,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. 

மேலும், துப்பாக்கிகளை கைப்பற்றினால் 100,000 ரூபாயும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு, சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டால், தகவல் அளிப்பவருக்கு 150,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. 

பொலிஸார் அறிவித்துள்ள பணப் பரிசில்களின் முழு விவரம்:


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...