பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 5 ஆண்டுகள் சிறை 

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

பெப்ரவரி 9, 2024 - 15:14
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 5 ஆண்டுகள் சிறை 

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு,  5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோரை, சிவில் உடையில் உள்ள பொலிஸார் கண்காணிப்பதுடன், தமது இரகசிய கமராக்கள் மூலம் அதனை சாட்சியமாக பதிவு செய்வார்கள்.

பின்னர், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!