கடற்கரையில் நிர்வாணமாக கூடிய 2500 பேர் வெளியான தகவல்
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக 2,500 நபர்களை வைத்து நிர்வாண போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது.

நிர்வாண போட்டோ ஷூட்
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக 2,500 நபர்களை வைத்து நிர்வாண போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி புகைப்படக் கலைஞராக திகழ்பவர் ஸ்பென்சர் டுனிக். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் நிர்வாண போட்டோ ஷூட்டிற்கு புகழ்பெற்றவராவார்.
இந்நிலையில், இவர் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு மெகா நிர்வாண போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகிலேயே அந்நாட்டில் தான் தோல் புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
இந்தாண்டு மட்டும் சுமார் 17,756 பேருக்கு தோல் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 1,281 பேர் இந்த நோய் காரணமாக இறந்துள்ளனர்.
இந்நிலையில், தோல் மற்றும் உடல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு போட்டோ ஷூட் நடத்த திட்டமிட்ட ஸ்பென்சர் டுனிக், அதற்கான இடமாக சிட்னியின் போண்டி கடற்கரையை தேர்வு செய்தார்.
அங்கு சுமார் 2,500க்கும் மேற்பட்டோரை திரள வைத்து மெகா நிர்வாண போட்டோ ஷூட்டை நடத்தினார். போட்டோ ஷூட்டிற்காக அதிகாலை வேளையான சூரிய உதயத்தின் போதே திரண்ட மக்கள் கடற்கரையில் கடலின் முன்னர் நின்று நிர்வாணமாக போஸ் கொடுத்தனர்.
இது தொடர்பாக ஸ்பென்சர் கூறுகையில், "தோல் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். எனது புகைப்படக் கலையின் மூலம் உடலை கொண்டாடி அதை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு வந்துள்ளேன்" என்றார்.
டுனிக், 2010ஆம் ஆண்டில் சிட்னி ஓபேரா ஹவுசில் 5,200 பேரை வைத்து நிர்வாண போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.