வெளிநாட்டு பயணங்களுக்கு தடுப்பூசி அவசியமில்லை - கனடா அறிவிப்பு
கனடாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என அரசு அறிவித்துள்ளது.
விமானம் மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொள்ள தடுப்பூசி தேவையில்லை என கனடா போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பயணங்களின் போது முக கவசம் அணியும் உத்தரவு தொடருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.