யாழில் 14 மாத குழந்தை உயிரிழப்பு; வெளியான தகவல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 14 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு, காய்ச்சலின் தீவிரம் காரணமாக குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து , குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.