நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

தலவாக்கலையில் நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்று (10) முற்பகல் 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
60 வயது மதிக்கதக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவரின் விவரங்கள் தெரியவரவில்லை.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.