நள்ளிரவுக்கு அருகிலுள்ள நேரம் எது? காலை 11.55 மணியா, பின்னிரவு 12.03 மணியா?
கேள்விக்குச் சரியான பதில் எது என்பதற்கு இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்து உள்ளது. குறிப்பாக 'காலை 11.55 மணி' மற்றும் 'பின்னிரவு 12.03 மணி' ஆகிய தெரிவுகளுக்கு இடையே குழப்பம் உள்ளது.

பிள்ளைகளுக்கான கணக்குக் கேள்வி ஒன்று இணையவாசிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Twitter-இல் பதிவுசெய்யப்பட்ட கேள்வி இதுதான்.
'What is the closest time to midnight?' அதாவது 'நள்ளிரவுக்கு அருகிலுள்ள நேரம் எது?'
4 தெரிவுகள் வழங்கப்பட்டன:
- காலை 11.55 மணி
- பின்னிரவு 12.06 மணி
- காலை 11.50 மணி
- பின்னிரவு 12.03 மணி
கேள்விக்குச் சரியான பதில் எது என்பதற்கு இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்து உள்ளது.
குறிப்பாக 'காலை 11.55 மணி' மற்றும் 'பின்னிரவு 12.03 மணி' ஆகிய தெரிவுகளுக்கு இடையே குழப்பம் உள்ளது.
பலர் பின்னிரவு 12.03 மணி என்பது சரியான பதில் எனக் கூறியுள்ளனர். ChatGPT-யும் அவ்வாறே பதிலளித்துள்ளது. நள்ளிரவிலிருந்து 3 நிமிட வித்தியாசம் மட்டுமே உள்ளது என்று ChatGPT கூறியுள்ளது.
எனினும், ஆங்கிலம் பேசும் மற்ற பலரோ கேள்வியில் பயன்படுத்தப்பட்ட 'to' என்ற சொல் எதிர்காலத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை என்று சொல்கின்றனர்.
சரியான பதில் நள்ளிரவுக்குப் பிறகு இடம்பெறும் நேரமாக இருக்கமுடியாது. நள்ளிரவுக்கு முன் இடம்பெறும் நேரமாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் வாதம்.
'காலை 11.55 மணி' என்பது சரியான பதில். அதற்கும் நள்ளிரவு 12 மணிக்கும் இடையே 12 மணி 5 நிமிட வித்தியாசம் மட்டுமே உள்ளது என்றும் ஆனால், அதற்கும் பின்னிரவு 12.03 மணிக்கும் இடையே 23 மணி 57 நிமிட வித்தியாசம் உள்ளதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?