சந்தன பேழையில் துயில் கொண்டார் கேப்டன்... மனதை கனக்க செய்த வாசகம்!
விஜயகாந்த் மீளா துயில் கொள்ள பிரத்யேகமாக 50 கிலோகிராம் எடைகொண்ட சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைில் சிகிச்சை பலனின்றி நேற்று (28) காலமான நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று(29) பிற்பகல், சென்னை தீவுத் திடலில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி சென்றது.
கேப்டன் விஜயகாந்த் இறுதி பயணம்... அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
இதனையடுத்து, விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன், விஜயகாந்த் மீளா துயில் கொள்ள பிரத்யேகமாக 50 கிலோகிராம் எடைகொண்ட சந்தன பேழை தயார் செய்யப்பட்டிருந்தது.
அதன் ஒரு புறத்தில் ” கேப்டன்” என்றும் மறுபுறத்தில் “புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ நிறுவன தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
அத்துடன் விஜயகாந்தின் பிறப்பு , இறப்பு தேதிகள் சந்தன பேழையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.