மேத்யூஸுக்கு Timed out கொடுத்தது ஏன்? ஆதாரத்துடன் புட்டு வைத்த போட்டி நடுவர்
மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து விட்டது. அதனால் நான் மாற்ற செல்கிறேன் என்று கூறுகிறார்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்து இருப்பது மிகப்பெரிய விவாதத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
மேத்யூஸ் இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வரவில்லை என்பதால் தான் தாங்கள் அவுட் கேட்டதாக பங்களாதேஷ் வீரர்கள் விளக்கம் அளித்துள்ள நிலையில் தாம் இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வந்துவிட்டேன் என வீடியோ ஆதாரத்துடன் மேத்யூஸ் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏமாற்றி விட்டார்கள்....என் வாழ்க்கையில் இப்படி ஒரு அணி தரம் தாழ்ந்து பார்த்ததில்லை - மேத்யூஸ் தாக்கு
இந்த நிலையில் மேத்யூஸ்க்கு அவுட் வழங்கியது ஏன் என்று நடுவர் ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்த உலகக்கோப்பை தொடர் எம்.சி.சி. யின் கிரிக்கெட் விதிப்படிதான் நடந்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம்.
டைம் அவுட் விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள இரண்டு நிமிடத்தில் தயாராக வேண்டும்.
எப்போதுமே ஒரு வீரர் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த வீரர் இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வருகிறாரா இல்லையா என்பதை வீடியோ மூலம் மூன்றாம் நடுவர்கள் சோதனை செய்வார்கள்.
ஆனால் மேத்யூஸ் களத்திற்கு வருவதற்கு இரண்டு நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டார். இதனை பங்களாதேஷ் அணி சுட்டிக்காட்டியவுடன் வீடியோ ஆதாரத்தை பார்த்து தான் மூன்றாம் நடுவர்கள் களத்தில் இருக்கும் நடுவருக்கு அவுட் வழங்கலாம் என்று கூறினார்கள்.
மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து விட்டது. அதனால் நான் மாற்ற செல்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து விட்டது என்று கூறுவதற்கு முன்பே அவர் இரண்டு நிமிடத்தை தாண்டி விட்டார். இதனால் தான் நாங்கள் மேத்யூஸ்க்கு அவுட் வழங்கினோம் என்று நடுவர் ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக் கூறியுள்ளார்.