ஏமாற்றி விட்டார்கள்....என் வாழ்க்கையில் இப்படி ஒரு அணி தரம் தாழ்ந்து பார்த்ததில்லை - மேத்யூஸ் தாக்கு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டவுட் முறையில் ஆட்டம் இழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நவம்பர் 7, 2023 - 11:51
ஏமாற்றி விட்டார்கள்....என் வாழ்க்கையில் இப்படி ஒரு அணி தரம் தாழ்ந்து பார்த்ததில்லை - மேத்யூஸ் தாக்கு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டவுட் முறையில் ஆட்டம் இழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

களத்திற்கு வர தாமதமானதாக கூறி பங்களாதேஷ் அணி அவுட் கேட்டதால் இதற்கு டைம் அவுட் என்ற முறையில் அவுட் வழங்கப்பட்டது. 
ஆனால் தாம் களத்திற்கு வந்துவிட்டதாகவும் ஹெல்மெட் சரியில்லை என்று தான் வாங்க சென்றேன் என்று பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் அப்போதே நடுவரிடமும் ஷகிபுல் ஹசனிடமும் உரையாடினார்.

ஆனால் அவர்கள் இதனை கேட்கவில்லை. இந்த நிலையில் இலங்கை அணி 279 ரன்களில் ஆட்டம் இழக்க அதனை 41.1 ஓவரில் எல்லாம் பங்களாதேஷ் அணி எட்டியது. 

இதனை அடுத்து போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கடுமையாக சாடி பேசினார். இது குறித்து பேசிய அவர் பங்களாதேஷ் அணியில் ஷகிபுல் ஹசன் செய்த காரியம் மிகவும் மோசமானது, அவமதிக்கத்தக்கது என்று மேத்யூஸ் கூறியுள்ளார்.

2 நிமிடங்கள் முடிவதற்குள்ளே நான் களத்திற்கு மீண்டும் பேட்டிங் செய்ய வந்து விட்டேன் என்று சுட்டிக்காட்டி உள்ள மேத்யூஸ் இது தொடர்பான வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அதில் ஐந்து வினாடிகள் பாக்கி இருக்கும்போது நான் களத்திற்கு வந்தது தெளிவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இதனால் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக பங்களாதேஷ் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் மேத்யூஸ் சுட்டி காட்டினார். இதேபோன்று தன்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு எதிரணி இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போனதை நான் பார்த்ததே கிடையாது என்றும் மேத்யூஸ் கடுமையாக சாடி இருக்கிறார். 

சகிபுல் ஹசன் மற்றும் பங்களாதேஷ் அணி மீது தமக்கு மிகுந்த மரியாதை இருந்ததாகவும் அது அனைத்தும் இன்று போய்விட்டதாகவும் மேத்யூஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கிரிக்கெட்டை மதிக்காத, எதிரணியை மதிக்காத ,விதிகளை மதிக்காத ஒரு அணியுடன் நாங்கள் கைக்குழுக்க தேவையில்லை என்று சுட்டிக் காட்டிய மேத்யூஸ் வீரர்களின் பாதுகாப்பு குறித்து பலரும் பேசி வரும் நிலையில் உடைந்த ஹெல்மெட் உடன் எப்படி ஒரு பேட்ஸ்மேன் விளையாடுவார் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பங்களாதேஷ் அணி வீரர்கள் நடந்து கொண்டதாகவும் சாடியிருக்கிறார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!