மீண்டும் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சந்தையில் மரக்கறிகளின் விலை 800 ரூபாயைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடிாத நிலை மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.