தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு – விவரம் இதோ!
இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 674,404.42 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,844 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,460 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 187,650 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,050 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,510 ரூபாயாக காணப்படுகின்றது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,530 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 164,250 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.