தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி.. வெளியான மகிழ்ச்சி தகவல்!
தமிழகத்தில் அண்மைகாலமாக தங்க விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகின்றது.

தமிழகத்தில் அண்மைகாலமாக தங்க விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகின்றது.
அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 ஆக குறைந்து ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போன்று 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,165 ஆகவும் சவரன் ரூ.57,320 ஆகவும் விற்பனையாகிறது.
இதேவேளை, வெள்ளி விலையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.96.50 ஆக குறைந்து கிலோகிராமுக்கு ரூ.96,500 ஆக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.