திடீரென வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை - வெளியான மகிழ்ச்சி தகவல்
இன்றைய தங்க விலை நிலவரம்: இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 721,077 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய தங்க விலை நிலவரம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்த தங்கத்தின் விலை இன்று (09) சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 721,077 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் 25,440 ரூபாயாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 203,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 23,320 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 186,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,260 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 178,100 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 194,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அங்கு 22 கரட் தங்கப் பவுண்ஒன்று 179,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க நகைகளின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம்.