முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த திலக் வர்மா... ஒவ்வொரு சிக்சரும் நச்சு.. 177 ஸ்ட்ரைக் ரெட்டில் அசத்தல்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலே அசத்தினார்.

ஆகஸ்ட் 4, 2023 - 10:00
ஆகஸ்ட் 4, 2023 - 10:11
முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த திலக் வர்மா... ஒவ்வொரு சிக்சரும் நச்சு.. 177 ஸ்ட்ரைக் ரெட்டில் அசத்தல்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலே அசத்தினார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் பிரைன்லாரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

பூரான் மற்றும் கேப்டன் ரோமன் போவேல் அபாரமாக விளையாட மற்ற வீரர்கள் தடுமாறினர் இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரகளுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. 

இதனிடையே, இந்திய அணியில் இசான் கிஷன்கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அறிமுகப் போட்டிகள் களமிறங்கிய திலக் வர்மா தனது திறமையை நிரூபித்தார். தாம் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலே பலார் என சிக்ஸர் அடித்தார்.

தவறுகளை செய்துவிட்டோம்.. தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேச்சு

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ஆடி போயினர். அதேபோல் மீண்டும் சிக்ஸரை திலக் வர்மா பறக்க விட்டார். அப்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இயன் பிஷப் இந்தியாவின் எதிர்காலம் வந்துவிட்டது என்று பாராட்டினார். 

இந்திய அணி கொஞ்சம் நெருக்கடியான கட்டத்தில் இருந்த போதும் திலக் வர்மா கொஞ்சமும் கூட டென்ஷன் ஆகாமல் கூல் ஆன ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய திலக் வருமா 22 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். இதில் இரண்டு பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். திலக் வர்மா அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரொமோரியோ ஷெப்பர்ட் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மா தன்னுடைய முதல் போட்டியிலே மெர்சல் ஆன பேட்டிங்கை ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

திலக் வர்மா ஆடிய சில ஷாட்டுகளை பார்க்கும்போது யுவராஜ் சிங்கியும் சுரேஷ் ரெய்னாவையும் கலந்தது போல் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். தொடர்ந்து இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் திலக் வர்மா இடம் பெறுவார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!