தவறுகளை செய்துவிட்டோம்.. தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஆகஸ்ட் 4, 2023 - 09:57
தவறுகளை செய்துவிட்டோம்.. தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா நாங்கள் சேஸிங்கில் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருந்தோம்.

ஆனால் நாங்கள் செய்த சில தவறுகள் இந்த போட்டியில் எங்களுக்கு தோல்வியை கொடுத்திருக்கிறது. ஆனால் அது குறித்து நான் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் எங்களுடைய அணி இளம் வீரர்களை கொண்டது. இவர்கள் நிச்சயம் தவறு செய்வார்கள்.

அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டி முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 

ஆனால் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பேட்டிங் செய்யும்போது விக்கெட்டுகளை இழந்தால் சேசிங் செய்வது மிகவும் கஷ்டம். நாங்கள் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து விக்கெட்டுகளை கொத்தாக விட்டோம்.

அதுதான் எங்களுடைய தோல்விக்கு காரணமாக அமைந்தது. நாங்கள் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தது ஆடுகள சூழலை பார்த்து தான். இதே போன்று சாகலும் குல்தீப் யாதவும் இணைந்து விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். 

அக்சர்பட்டேல் பேட்டிங்கிற்கு உதவுவார் என நினைத்தோம். முகேஷ் குமார் வாழ்க்கையில் கடந்த இரண்டு வாரம் மிகவும் சிறப்பானது. டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் என்ற மூன்று வகை கிரிக்கெட்டிலும் அறிமுகமாக இருக்கிறார்.

இதேபோன்று திலக் வர்மாவின் பேட்டிங்கும் பார்ப்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி ஒரு மெர்சலான தொடக்கம் அமைவது நிச்சயம் யாருக்கு தான் மகிழ்ச்சியை கொடுக்காது. எங்கள் இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டி நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும் என நம்புகிறேன் என ஹர்திக் பாண்டியா கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!