முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு... வெளியான அறிவிப்பு

வரி அதிகரிப்பை அடுத்து பெட்ரோல் விலை அதிகரித்தால் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்

Dec 29, 2023 - 17:40
முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு... வெளியான அறிவிப்பு

வரி அதிகரிப்பை அடுத்து பெட்ரோல் விலை அதிகரித்தால் ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (29) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் பெருமதி சேர் வரி 18% ஆக அதிகரிப்பதனால், பெட்ரோல் விலை உயர்ந்தால் முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்படும்.

பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கம் அதிகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அதிகரிக்கப்பட்டால், எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணமும் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் அரசாங்கம் பெற்றோல் விலையை உயர்த்திய சந்தர்ப்பங்களில் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இம்முறை அவ்வாறு இருக்க முடியாது, விலையேற்றத்திற்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.” என்றார்.

இந்நிலையில், பயணிகள் உயர்த்தப்பட்ட விலையை எவ்வாறு தாங்குவது என்பதில் சிக்கல் உள்ளது, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...