பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் திடீர் விடுமுறை அறிவிப்பு

கண்டி நகரத்தில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28, 2023 - 00:22
பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் திடீர் விடுமுறை அறிவிப்பு

கண்டி நகரத்தில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் நடைபெறாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக மூன்று சனிக்கிழமை பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

எசல பெரஹெராவுக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுகின்றன.

இவ்வாறு, அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ள பாடசாலைகள் விவரம் வருமாறு,

  • கண்டி நகரத்திலிருந்து கடுகஸ்தோட்டை பாலம் வரையிலான பாடசாலைகள்
  • கண்டி நகரத்திலிருந்து பேராதனை பாலம் மற்றும் கன்னோறுவ சந்தி வரையான பாடசாலைகள்
  • கண்டி நகரத்திலிருந்து குளச்சுற்றுவட்டத்திலிருந்து  அம்பிட்டிய வரையான பாடசாலைகள்
  • கண்டி நகரத்திலிருந்து தென்னேகும்புர பாலம் வரையான பாடசா​லைகள்
  • தொடம்வல ரோயல் ஆரம்பப் பாடசாலை/போவல வத்தை /ஹந்தான வரையான பாடசா​லைகள்
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!