ரயில் இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயந்திர சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஜுன் 7, 2024 - 11:43
ரயில் இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயந்திர சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக காலை வேளையில் இயங்கும் அலுவலக ரயில் அதிகம் பாதிக்கப்படாது எனினும் இன்று பிற்பகல் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 84 ரயில் சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினையின் அடிப்படையில் அந்த சாரதிகளே இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!