எரிபொருளுக்கான QR முறை நிறுத்தப்பட்டது
எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட QR முறை இன்று (01) முதல் நிறுத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட QR முறை இன்று (01) முதல் நிறுத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இன்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை நிலவிய காலப்பகுதியில் எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுக்க QR முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், QR திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்த நிலையில், இனிஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறை பின்பற்றப்படாது.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.