பிரதேச சபையே இழப்புக்கு பொறுப்பாகும் - திகாம்பரம் 

கொட்டகலை நகரத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்புக்கு குறித்த பிரதேசத்துக்கு உரிய பிரதேச சபையும் பொறுப்பு கூற வேண்டும்.

மார்ச் 7, 2023 - 16:03
மார்ச் 7, 2023 - 16:03
பிரதேச சபையே இழப்புக்கு பொறுப்பாகும் - திகாம்பரம் 
கொட்டகலை தீ விபத்து

கொட்டகலை நகரத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்புக்கு குறித்த பிரதேசத்துக்கு உரிய பிரதேச சபையும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

தீயணைப்புப் பிரிவுகள், நுவரெலியா மாநகர சபையிலும், ஹட்டன் நகர சபையிலுமே உள்ளன. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கலாக 12 உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தும் இரண்டில் மாத்திரம் இந்த தீயணைப்பு வசதிகள் காணப்படுகின்றமை அசாதாரணமானது. குறித்த சபைகளுக்கு தலைமையேற்கும் தலைவர்கள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை என்றார்.

இடங்களை கையகப்படுத்துவதிலும், சுய வருமான ஈட்டலிலும் அக்கறை செலுத்தும் தலைவர்கள் ஏன் இதற்கு அக்கறை செலுத்துவதில்லை. கடந்த 5 வருட  சபை ஆட்சி காலத்தில் இதனை பெற்றுக்கொள்வதற்கான  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான வசதிகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இத்தகைய சேவையினை வழங்குவதே சபைகளின் பொறுப்பாகும் என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!