நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

​​65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையானது, மொத்த மக்கள் தொகையில் 18% ஆக அதிகரித்துள்ளது.

ஜுன் 22, 2024 - 23:04
நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

2050 ஆம் ஆண்டளவில் எமது நாட்டின் சனத்தொகையில் கால் பகுதியினர் வயது முதிர்ந்தவர்களாக இருப்பர் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறைப் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அண்மைய தரவு அறிக்கைகளில் இது தெரியவந்துள்ளது.

தற்போது, ​​65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையானது, மொத்த மக்கள் தொகையில் 18% ஆக அதிகரித்துள்ளது.

1971ல் இந்த நிலைமை 06.3% ஆக இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய முதியோர் செயலகத்தின் தரவு அறிக்கைகள் 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் முதியோர் சனத்தொகை 27.6% ஆக இருக்கும் என்று காட்டுகின்றன.

அதன்படி அவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம் தேவை என பேராசிரியர் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!