பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் சில நாள்களுக்கு முன்னர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இந்தக் கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதுடன், அடுத்தவாரம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் சில நாள்களுக்கு முன்னர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இந்தக் கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், அவரது சேவைக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், குறித்த சேவை நீடிப்பு கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இருப்பினும் அவருக்கு ஓய்வு வழங்கப்படாமல் ஜனாதிபதியினால் மேலும் மூன்று தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இதேவேளை, புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பான நியமனப் பத்திரம் அடுத்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியினால் அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.