சாய்ந்தமருது கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

சாய்ந்தமருது கடலில் மிதந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Oct 3, 2022 - 11:58
Oct 3, 2022 - 11:59
சாய்ந்தமருது கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

சாய்ந்தமருது கடலில் மிதந்த பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் குறித்த சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

55-60 வயது மதிக்கத்தக்க வயோதிய பெண்ணின் சடலத்தை மீட்டு கல்முனை கடற்படை முனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணை நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்