மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.
அதிகளவான மரக்கறிகள்சந்தைக்கு வந்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற வானிலையினை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்தது.
இந்த நிலையில், மீண்டும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றது.
கத்தரிக்காய் கிலோகிராம் 140 ரூபாயாகவும், பாகற்காய் கிலோகிராம் 200 ரூபாயாகவும், பயிற்றங்காய் கிலோகிராம் 120 ரூபாயாகவும், கோவா கிலோகிராம் 120 ரூபாயாகவும், வெண்டிக் காய் கிலோகிராம் 60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
பூசணிக்காய் கிலோகிராம் 120 ரூபாயாகவும், பச்சைமிளகாய் கிலோகிராம் 140 ரூபாயாகவும், தக்காளிப்பழம் கிலோ 120 ரூபாயாகவும், மரவள்ளி கிலோகிராம் 100 ரூபாயாகவும். கீரை ஒரு பிடி 80 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.