சந்தையில் பழங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கையின் உள்நாட்டு சந்தையில் பழங்களின் மொத்த விலை சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் உள்நாட்டு சந்தையில் பழங்களின் மொத்த விலை சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, கடந்த காலங்களில் 450 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் அன்னாசியின் விலை தற்போது 200 ரூபாயாக குறைந்துள்ளது.
அத்துடன் கொய்யா பழம் ஒரு கிலோகிராம் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாழைப்பழம், பப்பாசி, தர்பூசணி, மற்றும் விளாம்பழம் ஆகியவற்றின் விலைகளும் சடுதியாக குறைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.