பொங்கல் வைப்பதற்கு உகந்த நல்ல நேரம் இதுதான்...!

சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.

ஜனவரி 15, 2023 - 12:55
பொங்கல் வைப்பதற்கு உகந்த நல்ல நேரம் இதுதான்...!

சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.

இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.

இதன்படி இந்த ஆண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பது தொடர்பான விளக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.

பொங்கல் வைக்க உகந்த நேரம்

நல்ல நேரம் - காலை 07.30 மணி முதல் 08.30 வரை மாலை 03.30 முதல் 04.30 வரை

கெளரி நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை

ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

பொங்கல் வைக்க சரியான நேரம் - காலை 07.45 முதல் 08.45 வரை

வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

இதேவேளை மாட்டுப் பொங்கல் ஜனவரி 16 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

இதற்கமைய காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை மாட்டுப் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரமாக அமைகின்றது.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!