பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமைகளை ஆரம்பித்தார் தென்னகோன் 

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

நவம்பர் 30, 2023 - 14:48
நவம்பர் 30, 2023 - 14:50
பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமைகளை ஆரம்பித்தார் தென்னகோன் 

கொழும்பு, நவ.30 (நியூஸ்21) - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில் தேஷபந்து தனது கடமைகளை ஆரம்பித்தார். இந்த நிகழ்வில் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பல நாட்களாக வெற்றிடமாக இருந்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (29) நியமனம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு வேலைக்கு காத்திருப்போருக்கு அரிய வாய்ப்பு: டென்மார்க்கின் அறிவிப்பு வெளியானது

இதன்படி மேல் மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த தேஷபந்து தென்னகோன் 03 மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் அரசியலமைப்புச் சபைக்கு அறிவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!