வெளிநாட்டு வேலைக்கு காத்திருப்போருக்கு அரிய வாய்ப்பு: டென்மார்க்கின் அறிவிப்பு வெளியானது
ஐரோப்பிய நாடுகளில் பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்கும் டென்மார்க் அரசாங்கம் மகிழ்ச்சியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்கும் டென்மார்க் அரசாங்கம் மகிழ்ச்சியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
டிசெம்பர் 17 ஆம் திகதி முதல் டென்மார்க்கில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கும், அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 7 நாடுகளுக்கு இலவச வீசா... உடனடியாக அமுல்! எவ்வாறு பெறுவது?
இந்த புதிய விதிமுறைகளின் கீழ் ஒரு குறுகிய காலத்துக்கு எவ்விதமான வேலை அனுமதிபத்திரம், வீடு ஆகியவை இல்லாமல் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தனிநபர்கள் டென்மார்க் நிறுவனங்களில் 180 நாட்களுக்குள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பணியாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த சலுகை நிர்வாக பணியில் இருப்பவர்களுக்கும், உயர் மற்றும் நடுத்தர பணிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.